முல்லா நஸ்ருதின் அவருடைய அண்டை வீட்டுக்கதவைத் தட்டினார். அவர் கதவைத் திறந்து நஸ்ருதினை வரவேற்று அவருக்கு ஒரு இருக்கையை வழங்கினார்.

முல்லா அவரிடம் நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். நீங்கள் அதை விரும்பப் போவதில்லை ஆனால் உண்மையை எதிர் கொண்டே ஆக வேண்டும் என்றார்.
அண்டை வீட்டுக்காரர் “அது என்ன?” என்று ஆர்வமாகக் கேட்டார்.
உங்களது காளை என்னுடைய பசுவை மோசமாகத் தாக்கி காயப்படுத்தி விட்டது. இப்போதே அதற்குச் சிகிச்சை கிடைக்கவில்லை எனில், அது இறந்து விட வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு புதிய மாடு வாங்க பணமோ அல்லது காயப்பட்ட பசுவிற்கு முழுமையான சிகிச்சை அளிப்பதோ நியாயமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று நஸ்ருதின் கூறினார்.
நீங்கள் கூறுவது முற்றிலும் அர்த்தமற்றதும், மடத்தனமும் ஆகும் என்று அண்டை வீட்டுக்காரர் கோபத்துடன் கூறினார். ஒருவரது விலங்கு செய்ததற்கு அதன் உரிமையாளரை எப்படி நீங்கள் பொறுப்பாளராக்க முடியும்? நான் உங்களது பசுவைத் தாக்கவோ அல்லது காயப்படுத்தவோ இல்லை. அதனால் எந்த இழப்பீட்டுத் தொகையும் என்னைக் கேட்காதீர்கள் என்றார்.
ஓ, பதட்டம் மற்றும் வேகத்தில் உண்மையில் நடந்ததை வர்ணித்ததில் நான் ஒரு தவறு செய்ததற்கு வருந்துகிறேன். என் காளை தான் உண்மையில் உங்கள் பசுவைக் காயப்படுத்தியுள்ளது. யாருடைய காளை அல்லது யாருடைய பசு என்பது உண்மையில் ஒரு பொருட்டான விஷயமே இல்லை என்று நினைக்கிறேன். எப்படியும் இரண்டுமே விலங்குகள் தான். தவிர, நீங்கள் உங்களது எண்ணத்தைத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டீர்கள் என்று நஸ்ருதின் கூறினார்.

அண்டை வீட்டுக்காரரிடம் எந்தப் பதிலும் இல்லை.

பெரும்பாலும், ஒருவர் பூரணத்துவம், நீதி, நேர்மை மற்றும் ஒரு நியாயமான மரியாதை இவற்றைத் தமக்குப் பிரியமானவர்கள், மற்றவர்கள், உண்மையில் அனைவரிடம் இருந்தும் விரும்புகின்றனர். கேள்வி என்னவென்றால் நாமும் அதையே திரும்பக் கொடுக்கிறோமா என்பதுதான். உடனடியான பதில், ஆம் நான் செய்கிறேன் என்பதுதான். ஆனால் உண்மையில் நீங்கள் செய்கிறீர்களா? பலரிடம் இரண்டு விதமான விதிகள் உள்ளன. தங்களுக்குச் சாதகமான ஒன்று, மிகவும் கடினமான எப்பொழுதும் சிறந்ததான அடுத்தவர்களுக்கான ஒன்று.

பொதுவாக, அவர்கள் எதிர்கொள்ளும் நபரும் பெரும்பாலும் இந்த இரண்டு விதமான விதிகளைக் கொண்டிருப்பார்கள். இத்தகைய முரண்பாடு தான் மோதல், விரக்தி, ஒற்றுமையின்மை இவற்றுக்கான விளை நிலமாகிவிடுகிறது. உங்களது இரண்டு விதமான விதிகளும் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கும் போது, பிரச்சினைகளில் பாதி மறைந்துவிடும். கருணையானது மற்றவர்களிடம் இரக்கத்துடன் நடக்க வைக்கிறது. அதேசமயம் உங்களுக்கென்று ஒரு உயர்ந்த அளவில், சொந்த அளவுகோலை வைத்துக் கொள்ளுங்கள். யார் கருணையுடன் இருக்கிறார்களோ அவர்களுக்குச் சிக்கல்கள் தாமாகவே அகன்றுவிடும்.

சில நேரங்களில் விரும்பத்தகாத தன்னிச்சையான செயல்கள், அல்லது தற்செயலான செயல்கள், மற்றவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடும். அவை சாலை நிகழ்ச்சியில் ஏற்படும் ஆத்திரம், கண நேரக் கோபம், ஒரு பொய் அல்லது உங்களது அடையாளத்திற்குப் பங்கம் விளைவிக்கும் ஒரு சம்பவம் ஆக எதுவாகவாகவும் இருக்கலாம். இதுவே மற்றவர்களுக்கும் பொருந்தும். அவர்களும் உங்களைப் போன்ற மனிதகுணமும், எல்லோரையும் போன்ற தெய்வீககுணமும் உள்ளவர்கள் தான். இதை நீங்கள் நினைவில் கொண்டால், உங்களது சிந்தனையின் செயல்முறையும், மக்களைக் கையாளும் உங்கள் முறையும் மாற்றமுறும்; நீங்கள் உங்களை அவர்களுடன் அதிக இணக்கமாகக் காண்பீர்கள்.

நான், இங்கே மாயா ஆஞ்ஜெலௌவின் மேற்கோளைக் கூற ஆசைப்படுகிறேன். “மக்கள் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை மறந்து விடுவார்கள், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மறந்து விடுவார்கள் ஆனால் நீங்கள் அவர்களை எப்படி உணர வைத்தீர்கள் என்பதை மறக்க மாட்டார்கள் என்று நான் கற்றுக் கொண்டேன்” என்றார்.

நீங்கள் போய், யாரோ ஒருவரைச் சிறப்பாக உணரவையுங்கள்! நியாயமாக இருங்கள். உலகத்தின் பொருட்டு உங்களிடம் உள்ள விதிகளை நிராகரியுங்கள்; உங்களுக்கான ஒரே ஒரு விதியை மற்றவர்களுக்கும் பயன்படுத்துங்கள். நீங்கள் இலேசாகவும், சுதந்திரமாகவும் உணர்வீர்கள்.

அனைத்து மதங்களாலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கோட்பாடுகளை உச்சரிக்க இதுவே சரியான தருணம்: “மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் மற்றவர்களுக்கும் செய்யுங்கள்”.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email